தாரணியும் தஞ்சைத் தமிழ்

கற்குந் தமிழ்வழிக் கல்வி தரு(ம்)மேன்மை
கற்குந் தமிழ்வழிக் கல்விதர - நிற்குமே
பாரிரு நூற்றுப் பதினா றடியுயர்ந்து
தாரணியும் தஞ்சைத் தமிழ்

தாரணியும் = தார் அணியும் என்றும் தாரணியும் என்றும் பொருள் கொள்க

கற்கும் தமிழ்வழிக் கல்விதர- கல்லுக்கும் தமிழ்வழிக் கல்விதர அதாவது உயிர் எழுத்துக்கள் 12ம் மெய்யெழுத்துக்கள் 18ம் சேர்ந்து 216
உயிர்மெய்யெழுத்துக்கள் அந்த 216 அடி உயரத்திற்கு கல்லை அடுக்கிக் கட்டிய தஞ்சைக் கோபுரம் நிழல் காட்டாது அதிசயம் தானே

எழுத்துக்கள் எண்ணிக்கையில் அமைத்த கல்லே உலக அதிசயம் ஆனால்...

நீயும் தமிழ் வழிக் கல்வி பயின்று பார் தெரியும் சரிதானே

எழுதியவர் : சு.ஐயப்பன் (24-Sep-16, 12:32 pm)
பார்வை : 580

மேலே