ஏழைகள்
எங்கள் பெயர் ஏழைகள்
சோதனைகளும் வேதனைகளும்
மட்டுமே எங்கள் சொத்து .......
எங்கள் எண்ணங்களில்
என்றும் தாழ்வில்லை.....
மாறாய் எங்களை
காணும் விழிகளில் தாழ்வுண்டு .......
காரணம் எப்பொழுதும்
பிறர் சுமை தங்குவதால் .........
எங்கள் வாழ்வில்
நிம்மதி என்றும் நிலையில்லை ....
இருப்பினும் உழைப்பிற்கு
மட்டும் ஓய்வில்லை
உறங்கும் நேரம் தவிர்த்திட்டு .......
இவ்வுலகின் மாட மாளிகைகளிலும்
கூட கோபுரங்களிலும்
எங்கள் பெயர் உண்டு .......
முத்தாய் உதிர்த்த
வியர்வை துளிகளால் .......
எங்கள் முகவரியை
எளிதாய் உணர்த்திடும் ....
புயலாய் மாறிய பூங்காற்றும்
புகலிடம் தேடிடும் மழைவெள்ளமும் ......
இருப்பினும் ஒருபோதும்
கைகட்டி வாழ்வதும் இல்லை
கரம் தாழ்ந்து மாண்டதுமில்லை .......
மானம் ஒன்றனை
பெரிதாய் எண்ணி வாழ்கிறோம்
மறுமலர்ச்சி காணா இப்பூமியிலே.........