மேக வாழ்வு
ஈன்றள் கணிந்தமைக்கு 
பெயரிட்டு மகிழ்ந்து 
நற்சீரானாக்க 
கல்விச் சோலையிலமர்த்தி 
கற்றல் பயின்றோன் உன்னை 
சான்றோன் எனதுருவாக்கி 
நாட்டில் வளர் பெருங்குடியாக வளர்த்த்தும்மை உளம் பேரானந்தம் கொள்ள 
ஊற்றினை நீராய் 
செல்வமது கைப்பிரள 
உன் செழில்மிகு வாழ்வு 
மேகமதில் குடியேற 
காமுண்டு ஈன்றெடுத்து 
உள்ளங்கைதனிலே வளர்ப்பித்த தாய் தந்தையை நீ மறக்கலாமா 
உயிர் கொண்டு உலவுவதை எண்ணிப்பார் 
மேக வாழ்வு ஒருநாள் 
களையும் அன்று நீ அழுவாய் ஆனால் 
நீர் பெருக்கோ உனை 
ஈன்றோர் விழியில் 
வழிந்தோடும்..
 
                    
