யதார்த்தம்
பறந்து செல்லும் பறவை
பாதை மறப்பதில்லை
அலைந்து திரியும் மனது
அமைதி அடைவதில்லை
கருவிழி இல்லா கண்கள்
காட்சி காண்பதில்லை
பாதை அறியா கால்கள்
பயணம் முடிப்பதில்லை
அன்பு அறியா குழந்தைகள்
பண்புடன் வளர்வதில்லை
கடலில் சிக்கிய படகுகள்
கரை சேர்வதில்லை
ஆழ் மனதில் உள்ள வடுக்கள்
வாழ்க்கை முழுதும் அழிவதில்லை
அன்புடன் அரவணைத்து ஆதரித்தால்
அழகாக வளர்வது பூக்கள் மட்டுமல்ல
பிள்ளைகளும் கூட தானே .....

