எத்தனை வனப்படி என் ப்ரியே

சேலைத் தலைப்பு
நெசவாளன் நூலில் எழுதும் கவிதை
நூலின் வனப்பு
கவிஞன் தமிழ்ச் சொல்லில் எழுதும் கவிதை
பானை வனப்பு
குயவன் மண்ணில் எழுதும் கவிதை
சோலை வனப்பு
மலர்கள் கொடிகளில் எழுதும் கவிதை
மாலை வனப்பு
ஆதவன் அந்திப் பொழுதில் எழுதும் கவிதை
காலை வனப்பு
ஏர் உழவன் நிலத்தில் எழுதும் கவிதை
வானத்தின் வனப்பு
வானவில் வண்ணத்தில் எழுதும் ஏழு நிறக் கவிதை
கார்முகில் வனப்பு
காலம் தப்பாது பூமியில் எழுதும் கவிதை
மழலையின் வனப்பு
பொக்கைவாய்ச் சிரிப்பினில் எழுதும் கவிதை
இரவின் வனப்பு
விரியும் கனவுகள் எழுதும் கவிதை
பகலின் வனப்பு
உழைப்பவர்கள் வியர்வையில் எழுதும் கவிதை
என் அன்பே உன் வனப்பு
நீ புன்னகையில் இதழில் எழுதும் கவிதை
உன் கூந்தலில் தென்றல் எழுதும் கவிதை
உன் விழிகளில் கயல்கள் எழுதும் கவிதை
உன் மார்பினில் தாமரை எழுதும் கவிதை
உன் இடையினில் கொடிகள் அசையும் கவிதை
உன் பாதங்களில் ரோஜா எழுதும் கவிதை
இவையெல்லாம் தாங்கி நடந்து வந்து
என் நெஞ்சக் கதவினை உன்கள்ளவிழியால் திறக்கும் வனப்பு
கைதேர்ந்த உன் சாகசக் கவிதை

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Sep-16, 10:53 am)
பார்வை : 160

மேலே