யார் அந்த 33 கோடி கடவுள்கள்
இந்துக்களுக்கு 33 கோடி கடவுள்கள் இருக்கிறார்கள் என நாம் அறிவோம்.
வேதங்கள் 33 ‘கோடி’ கடவுள்களை குறிக்கிறது.
‘கோடி’ என்ற வார்த்தை உச்சத்தை அல்லது சிறந்து விளங்குபவையை (உச்ச கோடி அல்லது நிம்ன கோடி) குறிப்பிடுகிறது. இங்கு கோடி என்றால் எண்ணிக்கை கோடியல்ல.
அதனால் அதற்கு அர்த்தம் – நம்மிடம் வல்லமை படைத்த 33 கடவுள்கள் இருக்கிறார்கள் என சமயத்திரு நூல்கள் கூறுகிறது.
33 கடவுள்கள்:
=============
வசு =08
ருத்ரா =11
ஆதித்யா =12
ஆகாயம் =02
பூமி =01
-----------------------
கடவுள்கள்=33
-----------------------
அட்ட வசுக்கள்:
------------------------
அட்ட வசுக்கள் என்பவர்கள் மனுவின் மைந்தனான பிரஜாபதியின் எட்டு மகன்கள் ஆவர். அவர்களின் பெயர்கள் தரா, துருவா, சோமா, அஹா, அனிலா, அனலா, பிரதியுஷா மற்றும் பிரபாசா ஆகும். [1]
வசு எனும் சொல்லுக்கு வெளி (Space) என்று பொருள். இவர்கள் இயற்கையையும் இயற்கைக் கோட்பாடுகளையும் உருவகிப்பவர்கள். இந்த அட்ட வசுக்களில் தரா எனும் வசு புவியையும், அனலன் எனும் வசு நெருப்பையும், ஆப எனும் வசு நீரையும், அனிலன் எனும் வசு காற்றையும், துருவன் எனும் வசு துருவ நட்சத்திரத்தையும், சோமன் எனும் வசு சந்திரனையும், பிரபாசன் எனும் வசு வைகறையையும், பிரத்யூசன் எனும் வசு ஒளியையும் குறிப்பவர்கள்
[1].மகாபாரதம், ஆதி பர்வம், பக்கம் 284.
மற்ற கடவுள்களின் பெயர் தெரியவில்லை...தெரிந்தவர்கள் கூறவும்.....
நன்றியுடன்,
ஜ.கு.பாலாஜி.