சிலேடை வெண்பா

எண்ண இனித்திடும் யாவும் மறந்திடும்
வண்ணம் பலவாய் வளையவரும் ! -கண்பட்டால்
வேதனைதான், என்றும் விரும்பும் பணத்துக்குக்
காதலும் ஒப்பாகும் காண் .

பணம்
``````````
கைகளில் அடுக்கி வைத்து எண்ணுகையில் இன்பமாய் இருக்கும் .
பணம் அதிகம் சேர்ந்து விட்டால் பழசெல்லாம் மறந்தே போகும் .
பல வண்ணங்களில் பல கைகள் மாறிச் சுற்றிவரும் .
கண்ணேறு பட்டால் போற இடம் தெரியாமல் போகும் .

காதல்
``````````
எண்ணிப் பார்க்கையில் இன்பம் ஊற்றெடுக்கும் .
காதல் வயப்படின் சுற்றம் , நட்பு மற்றும் ஊண், உறக்கமும் மறந்து போகும் .
கனவுகளில் , கற்பனையில், கவிதைகளில் வண்ணப் பெருக்கெடுத்து வளையவரும் .
தெரிந்தோர் கண்களில் பட்டால் காதலுக்கு அபாயம்தான் ! அதனால் வேதனைதான் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (25-Sep-16, 11:29 pm)
Tanglish : siledai venba
பார்வை : 63

மேலே