காதலாய் கலந்தவள் நீ

புது மனதில்
தேன்துளி தெளிக்கும்
தேவதையாய்
வந்தவள் நீ

புது மழை
சாரல் துளியில்
வனவில்லாய்
வளர்ந்தவள் நீ

புது நிலவில்
ஒளி வீசும்
அழகாய்
ஜொலித்தவள் நீ

புது உயிரில்
மனம் உருகும்
காதலாய்
கலந்தவள் நீ

புது வாழ்வின்
காதல் அமுதை
பருகும் என்
காதலியும் நீ


- ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (25-Sep-16, 11:54 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 302

மேலே