வெள்ளத் தாழிசை -- இயற்கையைக் காப்போம்

இயற்கைத் தருகின்ற இன்பத்தை நாளும்
பெயர்க்கும் வகைசெயல் பேரழிவா மென்றும்
தயக்கமு மேனோ தவிர் .

வியக்கு முலகின் விடிவெள்ளி தன்னை
மயக்கமும் வேண்டாம் மலர்ந்திடச் செய்யத்
தயக்கமு மேனோ தவிர் .

செயற்கை நிறைந்தால் செழுமை குறையு
முயர்ந்த நலனு முலகினில் கிட்டாத்
தயக்கமு மேனோ தவிர் .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (26-Sep-16, 2:38 pm)
பார்வை : 173

மேலே