காதல்

கவியோடு கவிப்பேசி
கன்னி உன்னை
காதலித்தேன்..
உன் நினைவை
நான் தின்று
நித்தம் நித்தம்
காதல் வளர்த்தேன்..
சின்ன சின்ன சண்டைகளும்
செல்லம் கொஞ்சும்
வார்த்தைகளும்
நினைவாய் புதைந்தது
நெஞ்சுக்குள்ளே..
உன் மனதை கொடுத்துவிட்டு
என் மனதை
வாங்க மறுக்கும்
உன் இதயத்தின்
நினைப்பென்ன..??
காலம் கனியும் வரை
காத்திருந்து என்ன பயன்..??
காயம் பட்டு பட்டு
இதயமும் கல்லாகிறது
எனக்குள்ளே..
இனி ஒரு மங்கையை
மனம் முடிக்க
மனமில்லாமல்
மங்கை உன் நினைவில்
வாழ்ந்திட ஆசையடி..
இருக்கும் தருணம் முதல்
இறக்கும் தருணம் வரை..!!
அன்புடன் அனாதையாய்..
கவிதை காதலன் குட்டி..!!