ஆப்பு ஆப்பு
வாடா நடராஜா. நல்லா இருக்கறயா?
@@@@@
டேய் தனராஜு நீ நல்லா இருக்கறயா? எம் பேரு இனிமே நடராஜன் இல்லடா . நட்ராஜ்-டா.
#@@
நட்ராஜ், எம் பேரு இப்ப தன்ராஜ்-டா.
@@@@@@@@
சரிடா தன்ராஜ், உங்க பாட்டி ஆப்பு, ஆப்பு-ன்னு சத்தம் போட்டுட்டு இருந்தாங்களே அது என்ன ஆப்புடா?
@@@##
எம் பையம் பேரு ஆப். அவனத்தாம் பாட்டி ஆப்புனு கூப்பிடுவாங்க.
ரண்டு இந்திக்காரங்க இந்தில உரையாடிட்டு இருந்தாங்க. அவுங்கள்ல ஒருத்தரு இன்னோருத்தரப் பாத்து ஆப் ஆப்-னு பல தடவ சொன்னாரு. அந்த வார்த்தையத்தான் நா எம் பையனூக்கு பேரா வச்சுட்டேன்.
@#######
பரவால்லடா தன்ராஜ். நீ பையனுக்கு வச்ச பேரு அழகான பேருடா. வடக்கே அஞ்சு வருசம் வேலை பாத்ததாலெ எனக்கு இந்தி நல்லாத் தெரியும்டா. ஆப்-ன்னா நீங்கள்-ன்னு அர்த்தம்டா.
@@@@@@@@@@@@@@@@@@@@ நகைக்க அல்ல. சிந்திக்க. தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இந்திக்கார்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவர்கூட தன் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டியிருமாட்டார்.
தமிழை போற்றி வளர்க்க வேண்டியவர்களே தங்கள் பிளளைகளுக்கு இந்திப் பெயர்களைச் சூட்டி பெருமைப்படும் நிலையில் உள்ளனர்.
.