விவசாயியின் வலி

வலியுடன் ஒரு வாழ்க்கை
வலிதானோ எங்கள் வாழ்க்கை
காய்ந்து போன கண்ணீர்
வற்றி போன வயிறு

காலம் சென்ற மழை
பொய்த்து போன வாக்குறுதி
போலியாய் ஒரு புன்னகை
நேசமாய் ஒரு சுரண்டல்

இதைத்தவிர என்ன கண்டு விட்டோம்
விவசாய பரம்பரைகள்
அப்போதும் உழைக்கிறோம்
உன் ஒரு ஜான் வயிற்றுக்கும் சேர்த்து

எழுதியவர் : ருத்ரன் (28-Sep-16, 9:20 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : vivasayiyin vali
பார்வை : 87

மேலே