வாழ்வின் மறுபக்கம்

..."" வாழ்வின் மறுபக்கம் ""..

அடக்கியாள ஆசையில்
மனிதன் மனச் செருக்கு
தலைக்கேறி தன்னிலை
தானிழந்து தள்ளாடுகிறது,,,

தூரம் இதுவென கடக்க
தூங்காதே பயணித்து
துவண்டே போகிறேன்
துருப்பிடித்த இரும்பாக ,,,

மரணம் தழுவவில்லை
மனத்தால் மறப்பதற்கு
மாயாத வடுக்களின்
மாறாத ரணமுமாய் ,,,

*சுற்றத்தின் காடழித்து
சுயநலக்காடு வளர்த்து
சூழ்ச்சியால் சூழப்பட்டு
சூனியமாகிப் போய்விட* ,,,

உண்மையென நம்பிய
உலகவாழ்வில் உறவு
உதட்டோரம் முளைத்த
உதிருக்கின்ற பூக்களாய் ,,,

இதுதான் வாழ்க்கையா
இதுவும் வாழ்க்கையா
எண்ணற்ற கேள்வியோடு
என் பயணம் பூவுலகில் ,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (28-Sep-16, 8:26 pm)
Tanglish : vaazhvin MARUPAKKAM
பார்வை : 108

மேலே