பட்டியல்
இனிப்புகளில் உனக்கு
என்ன பிடிக்கும்
என்றாய்...
சிறு வயதில் தந்தை
வாங்கி வரும்
நெய்யூறும் அல்வா பிடிக்கும்...
சற்றே அதிகமாய்
சர்க்கரை சேர்த்த
மாலை நேர தேநீர் பிடிக்கும் ....
என் கவிதைகளை
ரசித்து வாசிக்கும்
தோழியின் சிரிப்பு பிடிக்கும்....
எதிர்பாரா நேரத்தில் நீ தந்த
முதல் முத்தம் பிடிக்கும்...
நிறைமாத காலத்தில்
அக்கா மகள் பிஞ்சு கைகளில்
உரித்து தந்த ஆரஞ்சு பிடிக்கும்....
இதழில் இதழ் தேய்த்து
"யம்மி " என்று சிரிக்கும்
பிள்ளையின் முத்தம் ரொம்ப பிடிக்கும்.....