அன்பே ! உன்னுடைய காதலில் மட்டும் ?

அம்மாவின் காதல்
ஆழமானது,
அப்பாவின் காதல்
அன்பு உள்ளது
அக்காவின் காதல்
அரவணைப்பது
அண்ணனின் காதல்
அவ்வப்போது .
தங்கையின் காதல்
தனி பாசம் உள்ளது.
தம்பியின் காதல்
தாவி பாய்வது.
நண்பனின் காதல்
நாளும் வளர்வது
உற்றாரின் காதல்
உறவை வளர்ப்பது
ஆனால் அன்பே !
உன் காதல்
மட்டும்
உயிரை வதைப்பது!.
ஆனாலும் இதிலே
அனைத்தும்
உள்ளது!!.