என் முடியாத பயணம்

..."" என் முடியாத பயணம் ""...
நெடுந்தூரம் நான் ஓடி
களைத்துவிட்டேன் என்றே
எண்ணங்கள் தோன்றினாலும்
ஓடும் தூரமோ முடியவில்லை ,,,
விளையாட்டு வாழ்விங்கு ஓர்
வினையான வாழ்வாக பல
வேள்விகள் செய்த காலமின்று
வேடிக்கை காலமாக மலர்ந்தது ,,,
கண்ணீரை துடைத்திட ஆசை
இருந்தும் கடலைபோல் என்
கண்களுக்கு மட்டும் ஏனோ
ஓய்வெடுக்க விருப்பமில்லை ,,,
என் வாழ்க்கை சக்கரத்தில்
தேய்மானம் எந்தன் ஓட்டமதை
சோர்வாக்கி எழுத்துக்களை
கோர்வைக்குள் வராது தடுக்கிறது,,,
ஏதோவொரு தூரத்து ஒலியது
என்னை தனதாக்க அழைக்கும்
ஏக்கத்தால் கால்கள் இடறிவிழ
காயத் தாக்கங்கள் அதிகமாக ,,,
பேனாவோ போர்தொடுக்க தயார்
ஒரு போர்க்களம் காண ஏனோ
எந்தன் விரல்களுக்கே நடுக்கம்
ஒளி நிரப்பப்பட்ட வெற்றிடமாய் ,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...