மின் வெட்டு

ஊரெங்கும் மின் வெட்டு,
கண்ணீர் விட்டன,
மெழுகு வர்த்திகள்.
இயங்காத மின் சாதனங்கள்.
இயங்க முடியாமல்
முடங்கிப் போனது,
'இயந்திர' வாழ்க்கை.
தெய்வ மகளையும்,
குல தெய்வத்தையும்,
தரிசிக்க முடியாமல்
'வாணி'யும், 'ராணி'யும்.
ஆயிரம் மின்விளக்கொளியில்
ஆங்காங்கே பொதுக்கூட்டம்.
மின் வெட்டை கண்டித்து.