அவள் பாசம் மட்டுமே என் செருக்கு

அஞ்சலையவள் மஞ்சள் பூசி
நெஞ்சகத்தில் என்னை வைத்தாள்
மஞ்சத்த்தில் மகிழம் தூவி
மிஞ்சிடும் என்னை தணித்தாள்
ஆலிலை கண்ணன் எந்தன்
தாலியில் மோட்சம் கண்டாள்
ஆலிங்கணம் செய்யும் எந்தன்
வாலிபத்தின் விரகம் தீர்த்தாள்
பஞ்சணை சயனம் வேண்டாம்
நெஞ்சணை என்றும் போதும்
வஞ்சியுன் வசியப் புன்னகை
விஞ்சிடும் சொர்க்க வாசம்
காசு பணம் கண்டவுடன்
வேசியாய் பூரித்துப் பூக்கும்
மாசுள்ள மங்கையர் மடியில்
நாசியை என்றும் துறவேன்
பேசும் பொற்சித்திரமே
பேரின்பப் பொற்கொழியே
ஊசிமுனை இடம் பெறினும்
உன்னுடனே பகிரந்திடுவேன்
காசி இராமேஸ்வரம் எலாம்
தாசி நாடிடும் நீசருக்கு
தூசு அண்டாது காக்கும் உன்
பாசம் மட்டுமே என் செருக்கு
கவிதாயினி அமுதா பொற்கொடி