மயானம் Mayanam

        மயானங்கள்

எல்லா நிழல்களும்
எங்களின் நிஜங்கள் !

எல்லா சருகுகளும்
எங்களின் இலைகள் !

எல்லா முடிவுகளும்
எங்களின் ஆரம்பங்கள்!

எங்கள் மொழியின்
எல்லா வார்த்தைகளும்
மொளனங்கள்!

நாங்கள் கண்ணீரில்
தாகம் தணிக்கும்
கானகங்கள்!

நாங்கள்
நிகழ்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிற
உங்களின்
'எதிர் காலங்கள் '!

ஆனாலும்
எங்களுக்குள் பொறிக்கப்படுவது என்னவோ 
உங்களின்
"இறந்த" காலங்கள் தான்!!

எல்லா  கடிதங்களும்
எழுதப்படுவதோ
எங்கள் முகவரிக்கே !

வந்து சேர்வதோ
வெறும் உறைகள் மட்டுமே !!

எத்தனை முறை எரித்த போதும்
நாங்கள் மரித்துபோவதில்லை!

முற்று புள்ளிகளால் மட்டுமே
எழுதப்படுகிற எங்கள்
வாக்கியங்கள் முடிவதுமில்லை !

நாங்கள் காத்திருக்கிறோம்....

எழுதியவர் : நிலாரவி (1-Oct-16, 12:26 pm)
Tanglish : mayaanam
பார்வை : 416

மேலே