ஆகவே காதல் செய்வீர்

காலத்தும் பேசிடும் வார்த்தையிது
உள்ளத்தில் ஊறிடும் உணர்விது
ஞாலத்தில் மறையாத காதலது
காதலின் மறுஉருவம் அன்பானது !
வரம்பில்லை வயதும் காதலுக்கு
மதமில்லை உண்மை காதலுக்கு
மொழியில்லை தடை காதலுக்கு !
மழலைக் காலத்தில் தொடங்குது
ஆரம்பம் தாயிடமிருந்து காதலும்
அருவியெனக் கொட்டும் அன்பென !
குடும்பத்திலும் நிலவிடும் காதல்
பகிர்ந்திடும் பாசமெனும் பண்பால்
சுற்றங்கள் காட்டிடும் அன்பால் !
நட்புகள் இடையே மலர்ந்திடும்
இதயங்கள் கரும்பாய் இனித்திடும்
அழியா உறவெனும் காதலால் !
இருபாலாரை இணைக்கும் காதலும்
இருக்கும்வரை மகிழ்ந்திட செய்திடும்
இல்லறத்தில் இன்பமும் பொங்கிடும் !
ஆகவே காதல் செய்வீர் ......
பழனி குமார்