தம்பியாய் வளர்த்தேன்

தம்பியாய் வளர்த்தேன் நாயென்று நினையாமல்
தவறி விழுந்திட்டான் நிறைந்திட்டக் கண்மாயில் !
அலறித் துடித்தேன் அழுதபடி நின்றிருந்தேன்
நீச்சலும் அறியாததால் நீந்திட யோசித்தேன் !
வழியின்றி குதித்தேன் தண்ணீரில் தத்தளித்தேன்
இலக்கினை நினைத்தே கலக்கமுடன் நீந்தினேன் !
கையிலிருந்தப் பாத்திரமும் கைகொடுத்து உதவியது
நெருங்கினேன் நடுக்கமுடன் நெஞ்சத்தில் அச்சமின்றி !
மூழ்கிடும் நிலையில் முனகலுடன் பார்த்தது
அணைத்து எடுத்து பாத்திரத்தில் வைத்தேன் !
தலைமேல் தூக்கி களைப்புடன் திரும்பினேன்
உள்ளம் குளிர்ந்தது உவகையால் துள்ளியது !
பழனி குமார்