மரணம் அழைக்கிறது

..."" மரணம் அழைக்கிறது ""...

எண்ணற்ற ஆசையோடு
எத்துணை போராட்டம்
என்னென்ன தேரோட்டம்
எல்லாமும் முடிந்துவிடும்
எல்லை அடைந்துவிடும்
ஆம் மரணம் அழைக்கிறது ,,,

வாழ்க்கைச் சுவடியின்
வாசகங்கள் பூர்த்தியாகி
வாசமிழந்த வசந்தமாய்
வாடிவிட்ட பூவைப்போல்
வாடகை உடலிலிருந்து
வானவர்கள் உயிர்பறிக்க
ஆம் மரணம் அழைக்கிறது ,,,

கணக்குகள் சரிபார்க்க
கடந்தவை காட்சியளாக
கண்முன்னே வந்துசெல்ல
கண்ணீரே சாட்சியாக
கைவசமோ நேரமில்லை
கடைசியாய் உயிர்மூச்சு
ஆம் மரணம் அழைக்கிறது ,,,

அன்பினால் ஆட்சிசெய்து
நன்மையே உண்மையாய்
தீமைகளை விலக்கிவிட்டு
மண்ணறை வாழ்விற்கும்
மறுமையில் வாழ்வதற்கும்
மகிழ்வோடு தயாராவோம்
ஆம் மரணம் அழைக்கிறது ,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (1-Oct-16, 2:07 pm)
பார்வை : 1073

மேலே