கரு

கவிதை எழுத

நினைத்த பொழுது

எழுத ஒரு தூண்டலோ

ஒரு கருவோ கிடைக்காது

வழி புரியாது

விழி பிதுங்கி நின்ற எனக்கு

தூண்டலாய் நீ வந்தாய்

தோண்டல்கள் எனக்குள்

துவங்க

கருக்களுக்கோ

பஞ்சமில்லாமல் போனது

பிறசவித்த கவிதையில்

எல்லாம் கருவாக நீ

கவிதைகள் வளர சில

பொய்கள் உரமாய்

சில நிசங்கள் மட்டும்

நின்று போனது

கவிதையின்

கரு போல

கடைசியில் என்

கல்லறை கவிதைக்கும்
#SOF
கருவாய் நீ| #சேகர்

எழுதியவர் : #Sof #sekar (1-Oct-16, 1:44 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : karu
பார்வை : 169

மேலே