இயற்க்கை

இயந்திர உலகில் இயற்கைக்கு என்ன வேலை இனி ஒரு நாளும் தேவையில்லை அதன் சேவை!! இறைவனால் படைக்கப்பட்டது இயற்கை !!
இயற்கையை அழிக்க படைக்கப்பட்டது இயந்திரம் !!
இயற்கையை அழிக்க காரணம் என்ன ? நான் தரும் வேகம் உன்னால் பல சோகம் !!
இறைக்கும் நேரத்தில் நீர் இல்லை ! அறுக்கும் நேரத்தில் மழை தொல்லை !
கதிர்விடும் நேரத்தில் கதிரவன் தொல்லை !!
கருக்கானது எங்கள் பூச்சோலை !! வெறுப்பானது காலை மாலை ! இயற்கையால் வந்தது இடைவேளை ! கல்வி கற்க நேரமில்லை கண்ணீர் இன்றி ஓர் நாளுமில்லை !!
300 கூலிக்கு முப்பொழுதும் உழைத்தாலும் மூன்று வேலை சோற்றுக்கு போதவில்லை ,!! முதலாளி நாங்கள் ஏமாளி ஆனோம் !! இன்று !
வறுமை என்னும் பட்டம் கட்டி வெறும் வார்த்தைகளால் தோரணம் கட்டி !!
வெந்த புண்ணில் வேல் வீசி வேடிக்கைபாக்குது அரசியல் கட்சி !!இயற்கையின் சோதனையா!
எங்கள் வாழ்வே வேதனையா!!!! கண்ணீர் தான் நாம் கண்ட சாதனையா!!!!!

எழுதியவர் : தமிழ் செல்வன் .ஏ (3-Oct-16, 12:14 pm)
Tanglish : iyarkkai
பார்வை : 1406

மேலே