ஒற்றுப் பெயர்த்தல்
ஞாயி றெழுந்திட நாளிகம் பூத்திடும்
காயினு மானந்தக் கண்பனிக்கும் - கோயிலாள்
தாள்சேரத் தான்மகிழ்ந் தாடுமுள் ளத்திருப்
பாள்மன மும்களிக்கும் பார்த்து .
பொருள் -1
`````````````````
கதிரவன் உதித்ததும் தாமரை மலரும் , வெயில் காய்ந்தாலும் ஆனந்தமாய் தண்ணீரில் !
திருமகள் திருவடியைச் சேர மகிழும் . அதைப்பார்த்து அவள் உள்ளமும் களிக்கும் .
நாளிகம் - தாமரை
கோயிலாள் - திருமகள்
பொருள் -2
`````````````````
ஞாயிற்றுக் கிழமை எழுந்ததும் இவ்விடம் மனம் மலரும் . வெயில் வாட்டினாலும்
கண் மகிழ்ச்சியில் பனிக்கும் . கோயிலில் தன் உள்ளம் கவர்ந்தவளைப் பார்த்து மனம் மகிழ அவள் மனமும் களிக்கும் .
நாளிகம்- நாள் இகம் - இகம் -
இன்றைய பொழுது