பேனா முனையில் பெண்மையின் துளிகள்-துளி-01

பேனா முனையில் பெண்மையின் துளிகள்.......

துளி....01....

உள்ளத்தால் ஊனமற்றவள் அவளை...
கடவுள் பிறப்பால் ஊமையாக்கிவிட்டார்....
வாயிருந்தும் ஊமையாகிப்போனவர்கள் மத்தியில்...
அவள் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தாள்...
ஆனால் அவளுக்கு அநீதி இழைக்கப்பட்ட நேரம்
அவளுக்காய் குரல் கொடுக்க யாருமற்று
அநாதையாய் நின்றாள்....

காலையில் வீதியிலே தன் எதிர்கால கனவுகளில்
மூழ்கி சென்றவளை...
மனிதன் என்ற முகமூடியின் பின் மறைந்து கொண்ட
நான்கு மிருகங்கள் தங்கள் காமப்பசிக்கு இரையாக
அந்த வாய்பேச முடியா பூவினை கொடூரமாய்
கசக்கி எறிந்தது...
காளைகள் நடுவில் கன்னியவளும் சிதைந்து
சின்னாபின்னமாகிப்போனாள்....
வாய்பேச முடியா மங்கையவளும்.....
அகிலத்திற்காய் தன் குரல் கொடுத்த நங்கையவளும்...
கத்தி கத்தி ஓய்ந்து போனாள்....தன் கற்பை கொடுத்து உயிர்
இருந்தும் நடைபிணமாய் மாறிப்போனாள்....

அவள் உடலை எடுத்தவர்கள் உயிரோடு அவளை
விட்டு சென்றனர் வீட்டின் அருகில்...
பதறி ஓடி வந்த பெற்றோரிடம் அவள் என்னவென்று
சொல்வாள்....??
உங்கள் மகள் கற்பை தானம் வழங்கிவிட்டாள் என்று
சொல்லுவாளா...??
இல்லை....உயிரோடு என்னை நான்கு மிருகங்கள்
கொன்றுவிட்டார்கள் என்று சொல்லுவாளா...??
அவள் நாக்கு சிக்கிக்கொண்டது தொண்டைக்குள்...
வார்த்தைகளுக்கு பதில் அவள் விழிகள் வடித்தது உதிரத்தை...

வழிந்த உதிரத்தை தன் நெற்றியில் வீரத்திலகமாய் இட்டாள்...
உறைந்த கண்ணீரோடு துணிந்து புறப்பட்டாள் நீதி தேவதையின்
வாசல் தேடியே....
கிடைத்தது அவளுக்கு நீதி....
அவளை சிதைத்த கயவர்கள் வெளி வந்தார்கள் பிணையிலே...
அவள் இழந்த கற்பிற்கு பரிசாக(நஷ்ட ஈடாக)பெருந்தோகை பணமும் கிடைத்தது அவளுக்கு...
இது தான் அந்த நீதி தேவதை அவளுக்கு வழங்கிய நீதி...
இழந்த கற்பிற்கு அது ஈடாகுமா....அவள் தொலைத்த வாழ்க்கையை அது பெற்று தந்திடுமா...??
அனல் வீசும் அவள் மனதினை அது குளிர்மைப்படுத்திடுமா......??
கேள்விகள் தொடர்கதையாய்.....பதில்களோ விடுகதையாய்......??????????????????????????????

துளிகள் தொடரும்..............

இதை நான் கவிதையாக எழுதவில்லை....என் உணர்வுகளை உண்மை நிகழ்வுகளை அப்பிடியே கூறியுள்ளேன்....உங்கள் ஆதரவோடு துளிகள் தொடரும்....

-உதயசகி-

எழுதியவர் : அன்புடன் சகி (4-Oct-16, 4:39 pm)
பார்வை : 287

மேலே