கடலின் அழகே பெண்ணின் அழகு

கடலிலே கலந்த உப்பு கடலிற்கே உரித்தானது அதுபோல
பெண்ணிலே கலந்த அடக்கம் பெண்ணிற்கே உரித்தானது
அலையின் சீற்றம் குறைந்தாலும் அலைகள் ஓய்வதில்லை அதுபோல
வனப்பின் தோற்றம் குறைந்தாலும் அரவனணப்பு ஓய்வதில்லை
கடலின் ஆழமோ கற்பனையின் மறு உருவம் அதுபோல
பெண்ணின் ஆழமோ பெண்மையின் மறு உருவம்
அலையின் பண் ஆழ்கடல் மீன்களுக்கு தாலாட்டு அதுபோல
மடவாரின் பண் பெற்றெடுத்த குழந்தைக்கு தாலாட்டு
கதிரவனை உதிக்கச்செய்த உறவு உப்பில்பிறந்த உம்மையேசாறும் அதுபோல
கண்மணிகளை உதிக்கச்செய்த உறவு
பெண்ணில்பிறந்த பெண்ணையேசாறும்
கடல் நீரோ கரையில்லாமல் அலைவந்து சேராது அதுபோல
பெண் நீயோ ஆண்ணில்லாமல் ஒருமனமாக முடியாது
ஆழியிலே பயணித்தோம் மரம் இணைந்ந தோணியிலே நானோ
காதலிலே பயணித்தேன் உம்மிமை இணைந்த பார்வையிலே..!

எழுதியவர் : kingShiva (5-Oct-16, 2:08 pm)
பார்வை : 1541

மேலே