காட்டில் காமம்
முறுக்கேறிய காமம்
வியர்த்துக்கொட்டுகிறது,
மூச்சு முட்டி
முளைத்தெளுகிறது
நெருப்பாய் என் உணர்வுகள்,,,,,,
யாருமில்லை
இரு உயிர்கள்,
முட்டி மோதி சுவாசம்
தேடுகிறது.
காற்றும் உறங்கி விட்டது
கட்டிலும் காயப்படுகிறது,,,,
ராவுகள் பிறக்கும்
போதெல்லாம் நானும் அவளும்தான்
அமர்ந்திருப்போம்
வெளிச்சத்தை
அருந்திய படி,,,
சொர்க்கம் வரவேர்க்கிறது
வெள்ளை விரிப்போடு
வியர்வையில் குளிக்கிறேன்
உயிரை பிழிந்து கையில் பிடித்த படி..
கட்டிலும் சொல்கிறது
குதிக்கும் நாளகங்ளோடு
சொர்க்கத்தின் சுகம் பற்றி ,,,,
நிலவை விழுங்கிய
இருளில் இறக்கை
விரிக்கிறது உணர்வுகள்
பறவைகளின் கொண்டாட்டம்,
முக்கால் இரவும் முடிந்தது
அப்போதும்,
அவள் பாம்புபோல்
மேனியெங்கும்
மேய்ந்து போவாள்
மோகம் தலை மேல்
அமர்ந்திருக்க மூளையும்
விறைத்துபபோகும்
நரம்புகள் பட படக்கும்
நாவில் எச்சில் ஊறி
உயிரைக்குடிக்கும்,,,,
நான் மரணித்துப்போவேன்
இரவுகள் இறந்து போகும்
அவள் இறங்கிக்கொள்வாள்
என்னுள்ளே இருக்கை தேடி,,,,,,,,,