என்னவள் எங்கே

எனை துரத்திய விதியை சாடவா?
எனை கொண்ட பிணியை சாடவா?
எனது சேமிப்புகள் செலவழியும் முன்
எனை பூலோகம் மறுத்த தேன்?

நேற்று அறங்கேறியது போல் தோன்றுகிறது
நம் காதல் திருமண வைபோகம்
எத்தனை கோடி இன்பங்கள் தந்திட்டாய்
மனைவி எனும் மகுடம் சூடியவளே!

உடலிலும் கூடலிலும் இணையாய் நின்றாய்
காதல் விழிகளில் ததும்மி தெறிக்க
உன் முத்தத்தில் எனை நனைத்து
உன் அன்பினில் உறைய வைத்தாய்

சற்றும் எதிர்பாராமல் இறையடி சேர்ந்தேன்
என்னவள் கோலமென் எண்ணப்படி யில்லை
எடுத்துரைக்க அவள் அருகில் நானில்லை
என்னவளே சொர்கம் நரகமான தேன்?

என்னவள் பூண்ட அமங்கலி வேடம்!
ஐயோ! உன்னழகிற்கு இது நிகரில்லை
போலி புன்னகையும், நீளும் தனிமையும்
என் எண்ணங்களுக்கு ஏற்புடையதாக வில்லை

கணவன் ஆசையை கருத்தில் கொள்
மறுமணம் புரிய மனமிறங்கி வா
வாழும் நாட்களில் வசந்தம் வீச
என்னவளே என் சொர்கம் உன்சொல்லில்

எழுதியவர் : அருண்மொழி (5-Oct-16, 10:54 pm)
Tanglish : ennaval engae
பார்வை : 150

மேலே