சரியான தேர்வு காதல்

வருகின்ற நேரமெல்லாம்
மௌனம் கொண்டு வாட்டி
வதைக்க ஏனடி உனக்கு விழிகள்
அவை விழிகள் அல்ல
என் சவக்குழிகள் ...


மறுபடி மறுபடி உன்னை
கேட்டிட எனக்கு மனமில்லை
கேட்காமல் இருந்திட
உயிரும் விரும்பவில்லை
வாழவா சாகவா சொல்லடி

என்றாவது இந்நிலை
நீயும் அடைவாய்
அன்று தெரியும் காதல்
சரியான தேர்வு தான் என்று
சாக துணிய ....

எழுதியவர் : ருத்ரன் (5-Oct-16, 11:03 pm)
பார்வை : 78

மேலே