கலைத் தந்தை கருமுத்து தியாகராசர்

வித்தகத்தால், வியத்தகு செயலால் ,
மேன்மை தரும் அறிவால்,
மேதினியில் நின் பெயர் நிலைத்திட்டது.

அயராத உழைப்பால்,அனுதினமும் சிந்தித்த தொழிலால்,
ஆலை அரசர் என்று பெயர் பெற்றீர்.
கவின் மிகு கட்டிடங்கள், கண்ணில் நிற்கும் கலைப் பொருட்கள்,
கண்டவர் வியக்கும் ஓவியங்கள், அத்தனையும் போற்றி காத்ததால்,
கலைத் தந்தை என்று பெயர் பெற்றீர்.

சேர்த்து, படித்து, காத்த நூல்கள் ஆயிரமாயிரம்!
கல்விப் பணியென்று, பள்ளி முதல் உயர் கல்விக் கல்லூரி வரை,
செய்து வைத்த தர்மம் எத்தனை, எத்தனையோ!
தொட்டுச் சிறக்காத தொழில் இல்லை.

வாழ்ந்த நகர் பெயர் கொண்டு ,
மதுரை வங்கியும்,காப்பீட்டு நிறுவனமும் கண்டு,
பலர் வாழ்வில் ஒளி ஏற்றிய உண்மை வள்ளல்.

ஏற்றி வைத்த தீபம், அணையாத சோதியாய்
அன்றும், இன்றும், என்றும் காத்து வளர்ந்தோங்கும்
வளம் யாவும் மலரும் உன்னால் பயன் பெற்றவர் வாழ்வு.

எழுதியவர் : arsm1952 (6-Oct-16, 12:02 pm)
சேர்த்தது : arsm1952
பார்வை : 234

மேலே