தமிழர் வாழ்வியல்

தமிழர் வாழ்வியல்
(கவிதை)
மானம் பெரிதென நினைப்பர் – நிதம்
மாண்புடன் வாழ்ந்திடத் துடிப்பர்
பேணியே பண்பைப் போற்றி – பல
பெரும்புகழ் அதனைக் குவிப்பர்
தனக்கென வாழாத் தகைமை – அதுவே
தமிழன் கொண்டிட்ட உரிமை
உழைப்பே அவன் உயிர் மூச்சு – பிறரை
ஊக்கும் மொழியவன் பேச்சு
வீணனை வெறுத்தே ஒதுக்கும் – மனக்
கோணலைப் பழித்தே விலக்கும்
கள்ளங் கபடினை நீக்கி – தன்
உள்ளத் துயரினைப் போக்கி
வெற்றிக் கனியினை எட்ட – அறம்
பற்றுக் கொம்பென முயல்வர்
கிணற்றுத் தவளையென இன்றி – அவர்
குணக் கடல் சுறாவெனத் திகழ்வர்
திரைகடல் ஓடி திரவியம் தேடி
மறைபுகழ் காத்து மதிநலம் சேர்த்து
தமிழன் இவனென அனைவரும் புகழ – பல
பெரும்புகழ் தனையே விளைப்பர்.
அன்புடன்
திருமதி.ஸ்ரீ. விஜயலஷ்மி.
கோயம்புத்தூர் 22.