தூக்கு

செப்பிடும் வாய்களில் மதிமங்கிட
உப்பிட்டு உண்டதருணம் நினைவுதிரும்ப...
செலவல்லஇனி இச்செலவே கடைசியென
செல்வதற்கெனவே வாங்கத்துடிக்கும் ஒரு மாயை...
ஒருகனம் நினைவுகூர்ந்துப் பார்...!
செல்லுமிடம் சொர்க்கமென தொங்கிவிடு தூக்கிலென
சொக்கனா சொல்லிவைத்தான் சோம்பேரி உன்னிடத்தில்...
அர்தமற்றுப் புதைத்தவிடம் புல்விளையுமே தவிர
ஆங்கே அரச குலமாளும் புத்திரர்கள் விளைவதில்லை...
மனக்கதவைத் திறந்துவிட மாயைகளும் மாண்டுவிடுமென அன்றே
குன்றிலமர்ந்த குலமகனுக்கே கூறினாளவள் தமிழ்கிழவி...
வாழ்வினை எதிர்கொள்ள துணிவில்லா உனக்கு
ஊழ்வினை உரித்தாக்கவா இந்தப்பிறவி...
தான் உயிர்வாழ எவரோ பிண்ணிய கயிறினில்
நீ உயிர்துறக்க நினைப்பதென்ன நியாயம்...
நாட்டியமாடிய நாட்கள் உனக்கு நாளடைவில் மாறும்
நாளை உனக்கெனநன் நட்புகளும் கரங்களை உயர்த்தும்...
பயணடைந்த எவரும் பகிந்ததில்லை இதுவரை
பயணித்திட வேண்டாம் தானாகப் பழுதாகி விழும்வரை...
#தூக்கு