சிலையே தங்க சிலையே
சிலையே தங்க சிலையே
கனவில் வந்து வந்து மின்னும் சிலையே...
எனை பார்ப்பாய் பின் ஈர்ப்பாய்
நான் மெழுகாய் எரிவேன் சிலையே ....
தொலைவில் பார்த்தால் கண்ணால்
கொலைகள் செய்கின்றாய் ....
அருகில் வந்தால்
அணைத்து மோட்சம் கொடுக்கின்றாய் ....
பார்க்கும் நாளில் பறவை ஆகி
என்னில் பறப்பாய் பெண்ணே ....
பார்க்காத நாளில் நினைவாய் மாறி
கண்ணில் இருப்பாய் பெண்ணே ...
கை கோர்க்கும் நேரத்தில்
எங்கேயோ போகின்றாய் ...
கண்பார்க்கும் தூரத்தில்
கரைந்தே தான் போகின்றாய்...
என் வானம் என் பூமி
எல்லாமே போனாலும்....
என் வாழ்வும் என் சாவும்
எல்லாமே உன்னோடு தானே ...
உன் கண்ணிண் அசைவிலே
என் காலம் துடிகின்றதே ....
உன் கையசைவிலே
என் உயிர் வாழ்கின்றதே ....
நீ பார்க்கும் ஒர் பார்வை தானே
எனை இங்கு வாழ சொல்லி தூண்டும் ...