இதயத்துடன் கலந்த காதல்

விட்டு விட்டு
துடிக்கும் என் இதயம்
துடிப்பதையே விட்டு விடும்
மெளனத்தை கருத்தாய் காட்டி
கோபத்தைக் கண்ணில் காட்டி
சண்டையை காரணம் காட்டி
நீ என்னை விட்டு விட்டு
செல்லும் அந்நேரம் இதயம்
துடிப்பதையே மறந்து விடும்
உன்னுடன் பயணிக்கும் அந்நேரம்
எனக்கு பொன்னானது
உன் உயிருடன் என் உயிா் கலந்து
ரொம்ப நாளானது
என்னை நீ பிாிந்தால் என் உடல் இருக்கும் உணா்வு இருக்காது
இருவரும் சோ்த்தே இருப்போம் ஒருநாளும்
துன்பம் நம்மை அண்டாது