ஜன்னலுக்கு வெளியே

ஜன்னலுக்கு வெளியே


முதல் அறிமுகம் , முதல் முத்தம் போல்
முந்தைய சந்திப்புகள் தித்திப்பாய் நகர்ந்தன .

இரவின் நீளம் , அதிகாலைக் கனவு
என அதிகம் பகிர்ந்து கொண்டோம்

சில பொழுதுகள் செல்பேசிகள் மட்டுமே அறிந்த
செல்ல சிணுங்கல்கள்

நித்தம் ஒரு உடையில் தேவதையாய் நீ
அந்த சந்திப்பில் தொட்டு பேசும் எண்ணமும்
தொடாத நாகரிகமுமாய் நான்

சில நாட்களாய் சிணுங்கவில்லை
உன் செல்பேசி

பேச்சில் ஏதேனும் காயப்படுத்திவிட்டேனோ!
மிகுந்த ஒத்திகைக்குப் பின் ,எச்சரிக்கையுடனும்
ஒவ்வொரு வார்த்தையாக உதிர்க்கிறேன்

ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்பதுபோல்
பாவனை செய்கிறாய்

முறிந்து போன காதலால் மௌனத்துடன்
வெளியேறுகிறேன் நான்

அதன் காரணத்தையாவது
நீ கூறியிருக்கலாம் .







MULLAI RAJAN KAVITHAIGAL - முல்லை ராஜன் கவிதைகள்

எழுதியவர் : பூ.முல்லை ராஜன் (7-Oct-16, 2:56 pm)
பார்வை : 204

மேலே