மரமே

காற்றோடு
என்ன பேசுகிறாய் மரமே
இலை மொழியால்
காற்றுக்கு நீ வருடிக் கொடுக்கிறாயா?

காற்று உன்னை வருடிக் கொடுக்கிறதா?
பழுத்த பின் நீ உதிர்க்கும்
இலைச் சருகுகளின்
சலசலப்பு தாங்க முடியவில்லை.

வான் தொடும் உன் முயற்சிகள்
கிழிக்க எண்ணும்
உன் ஆவேசம், சரிதான்.
மேலும் ‘கீழும்’ வளர்கிறாயா?
மேலும் மேலும் வளரவா?
காப்பாற்றிக் கொள்ளவா?

எழுதியவர் : கனவுதாசன் (8-Oct-16, 6:07 pm)
சேர்த்தது : கனவுதாசன்
Tanglish : maramae
பார்வை : 260

மேலே