சதி செய்த விதி

கம்பிகளே இல்லாத ஜன்னல்கள்
கதவுகளே இல்லாத குடியிருப்புகள்
கூரைகளே இல்லாத வீடுகள்...- என

மனிதர்களே இல்லாத
இந்தக் குடியிருப்புக்கு பெயர் " வசந்தம் நகர் "

இது மட்டுமா...?

மரங்கள் இல்லாத.. தண்ணீர் இல்லாத
மொத்தத்தில் பசுமை இல்லாத ஒரு குடியிருப்பு
இந்த " வசந்தம் நகர் "

ஆம்...

இதனையும் விளம்பரப்படுத்துங்கள்
இருப்பிடம் இல்லா வனவிலங்குகளுக்கு...

முதல்பகுதி மட்டும்
தற்போது விற்பனையில்...

இது..
நீலகிரி மாவட்ட மலைச்சரிவினில்
மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு மிகமிக அருகில்... - என்று.,

இந்த மனைகள்.,

அதன் இருப்பிடங்களைத் தொலைத்து
மனிதர்களை துன்புறுத்தும் விலங்குகளுக்கு மட்டும்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (8-Oct-16, 11:53 am)
சேர்த்தது : Gouthaman Neelraj
Tanglish : sathi seitha vidhi
பார்வை : 142

மேலே