புது பேர் வைப்பதில் மோகம்
ராமு : டேய் சோமு இப்போல்லாம் நம்ம நாட்டுல
இளைய தலைமுறை கண்டபடி பேர் வெக்கறாங்களே
அதா பத்தி நீ என்ன நெனைக்கற கொஞ்சம் சொல்லேன்
சோமு : சொல்லறத்துக்கு என்ன இருக்குங்க அண்ணே
அந்த காலத்துல பெரியவங்கள மதிச்சாங்க
அவங்க வெச்ச பேர மதிச்சாங்க
ராமு : டேய் அதுக்கென்ன இந்த காலத்துல பசங்க
தருதலைனு சொல்லறீயா
சோமு : இந்த கால பசங்க ஏதோ ஒரு முகத்துல இருக்காங்க
தமிழ் ல பேறே இல்லாத மாறி வடக்கத்திய பெரு
இல்லான் காட்டி வெளி நாட்டு பெரு கூட வெக்கறாங்க
போக போக , கார்,லார்ரி ,பார்பர் ,டைலர் னு கூட
பேர் வெப்பாங்க போல இருக்கு
ராமு : டேய் சோமு நீ சொன்ன அதனை பேரும் நிஜமா
வெளி நாட்டவங்க வெச்சி இருக்காங்க தெரியுமா உனக்கு
சோமு : இறைஞ்சி சொல்லதங்கா அண்ணே இதை கேட்டு
எந்த பயலாவது இந்த பெயர்களையும் வெச்சுடப்போறாங்க
ராமு : எல்லாம் காலம் போக போக செரியாகுமோ !