நீமெல்ல சிரிப்பது ஏதுக்கடி
அந்தியில் ஆதவன் விடைபகர
சந்திரன் அனுமதி கேட்டுவர
இந்துவை கலையில் வென்றவளே
அந்திஅனுமதி உனக்கு ஏதுக்கடி ?
அந்திவானில் விண்மீன் கூட்டம்
அந்தவானில் நிலாவுக்கு ஏக்கம்
என்தோளில் இனிமையாய் சாய்பவளே
நீமெல்ல சிரிப்பது ஏதுக்கடி ?
நீசிரித்தால் நந்தவனம்
விழிகவிந்தால் அந்திவானம்
மொழிபேசினால் அமுதகானம்
பின்ஏதுக்கடி மௌனம் ?
----கவின் சாரலன்