சந்திரிகா உன் சாத்திரம் உரைக்கிறேன்
புன்னகைப் பூவாய் மலர்கிறாய்
புத்தகமாய் நெஞ்சில் விரிக்கிறாய்
கண்களில் கவிதை தருகிறாய்
கற்பனை வானில் பறக்கிறேன் !
கற்பனை வானின் தண்ணிலா
காதல் பேசும் வெண்ணிலா
பொய்யாது பொழியும் வான்மழை
புதுமையில் ஓடிடும் வைகைநான் !
புதுமை பேசும் நீலநயனம்
பொழிலில் பூக்கும் பூங்கமலம்
சாயந்திரப் பொழுதின் சந்திரோதயம்
சந்திரிகா உன்சாத்திரம் உரைக்கிறேன்நான்
சந்திரிகா உன்கலைகள் பதினேழு
சந்திரனுக்கோ கலைகள் பதினாறு
பதினேழாம் கலைகாதல் பார்வை
பார்வை தந்த பாவலன்நான்
பார்வைக்குப் பாடலாம் பாயிரம்
பாவைக்கு இன்னுமோர் ஆயிரம்
அந்திப் பொழுதில் அருகில்வா
ஆயிரமும் அன்பே சொல்வேன்நான்
---கவின் சாரலன்