உன் நிழலாய் இருப்பேன்
உயிரை கூட்டி போர பெண்ணே
கொஞ்சம் இங்கேயே நில்லடி
என் இதயம் தவிப்பதை கேலடி...
மண்ணில் நான் வந்த
நாட்கள் எப்படி இருந்ததோ
என தெரியாதடி எனக்கு
இப்போது தான் வந்தது போல்
உணருகிறேனடி உன்னை கண்டபின்...
உன் கை கோர்த்து
நடந்து உலகை சுற்றிட வேண்டுமடி...
நாம் சேர்ந்து வாழும் போது
பணம்,ஜாதி,மதம், என்று நம் காதலை
மறுத்தல் நம்மை பிரித்தால்
இந்த உலகம் தேவை இல்லை
கல்லறையில் வாழ்வோம்...
மீண்டும் இவை ஏதும் இல்லா
உலகினில் நாம் பிறந்து
சேர்ந்தே வாழ்வோமாடி...