தீக்குளிப்பு

உன்னை பற்றி அறியவில்லை ;
உலகை பற்றியும் புரியவில்லை !
மாற்றம் வரும் என நினைத்து ;
மரணத்தை சுவைக்கிறாய் !
தீயில் வெந்த உன் உடலோ ;
தீனியாய் வந்ததே தின செய்தித்தாளிலே !
ஊமை கண்ட கனவுபோல் ;
உன் மரணம் ஆனதே !
ஆதாயம் தேடியே ஒரு ;
அற்ப கூட்டம் அலையுதே !
யார் மனதையும் தொடாத உன் -
மரணம் வெரும் சொற்பமே !