கவிதை 130 உங்களுக்கு ஒன்றும் தெரியாது

வாக்குவாதம் வரும்போதெல்லாம் மகன்
தந்தையிடம் பலமுறை சொல்லும்சொல்
“உங்களுக்கு ஒன்றும் தெரியாது”
என்றுசொல்லி இடம் பெயர்வதுதான்

இப்போ பேரன் சொல்கிறான்
“தாத்தா வருந்தாதீர்கள் எங்களப்பாவிற்கு
ஒன்றும் தெரியாது” எனக்கேட்டதும்
தாத்தா மனதிற்குள் சிரித்துக்கொண்டார்

நம் தவறை மறைப்பதிற்கும்
அறிவுரையை கேட்க்காமல் இருப்பதிற்கும்
பயன்படும் கருவி அன்றோ
உங்களுக்கு ஒன்றும் தெரியாதென்பது?

ஒன்றை நாம் புரிந்துகொள்வோம்
உனக்கு ஒன்றும்தெரியாது என்பதின்
உண்மை அர்த்தம் எனக்கும்
ஒன்றும் தெரியாது என்பதுதானாம்

எனக்கு ஒன்றும் தெரியாதெனும்
எண்ணம் மனதினில் வந்துவிட்டால்
உள்ளத்தின் கதவுகள் திறந்துவிடும்
அறியாமை நெஞ்சினில் அகன்றிவிடும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (9-Oct-16, 12:08 pm)
பார்வை : 58

மேலே