தினமணி கவிதைமணி தந்த தலைப்பு பொம்மைகள் கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !

பொம்மைகள் ! கவிஞர் இரா .இரவி !

பெரியவர்களுக்குத்தான் அவைகள் பொம்மைகள்
குழந்தைகளுக்கோ உயிருள்ள நண்பர்கள் !

பொம்மைக்கு சோறுட்டி மகிழ்வார்கள்
பொம்மைக்கு ஒப்பனை செய்வார்கள் !

குழந்தைகளின் வாழ்வில் அங்கம் பொம்மைகள்
கூடவே வைத்துக் கொள்வார்கள் எங்கு சென்றாலும் !

குழந்தைகள் பேசி மகிழும் பொம்மைகளுடன்
குதூகலமாகக் கொஞ்சி மகிழும் நாளும் !

தூங்கும்போதும் பொம்மைகளைப் பிரிவதில்லை
தன் அருகிலேயே படுக்க வைக்கின்றனர் !

ஏழைவீடு பணக்காரவீடு பொம்மைகளின் தரம்
ஏற்றத்தாழ்வு இருந்தாலும் எல்லா வீட்டிலும் உள்ளன !

குழந்தைகள் பொம்மைகளின் பெற்றோர் ஆகின்றன
குழந்தைகள் பொம்மைகளுக்கு அறிவுரை வழங்குகின்றன !

குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு
குழந்தையாக இருப்பதும் பொம்மைகளே !

மரப்பாச்சி பொம்மைகள் வழக்கொழிந்து விட்டன
மனதில் இன்றும் அகலாமல் இருக்கின்றன !

ஆடை இல்லாத மரப்பாச்சி பொம்மைகளுக்கு
ஆடை கட்டி விட்டு ஆனந்தம் அடைவோம் !

குழந்தைக்கு காய்ச்சல் வந்தால் உடன் அம்மா
பொம்மையை உரசி எடுத்து பத்து இடுவாள் !

கேட்காமலே கணக்கில்லா முத்தங்களை
குழந்தைகள் பொம்மைகளுக்கு தந்து மகிழ்கின்றன !

யாரவது பொம்மையை எடுத்தால் அவர்
யாராக இருந்தாலும் கோபம் கொள்கின்றன !

பொம்மை உடைந்து விட்டால் கவலையில்
குழந்தைகளின் மனசும் உடைந்துவிடும் !

.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (9-Oct-16, 8:29 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 45

சிறந்த கவிதைகள்

மேலே