பாவேந்தர் வழியிலே

பாரதி தாசனே பைந்தமிழ் ஆசானே
சீர்மிகு நம்மொழி ஆற்றலைக் கொண்டவா
சாரதி நீயின்றி யாரோ தமிழில்
கவிஞரே வாழிய நீ
அற்புத நூல்கள் தமிழுக்கு தந்தவா
பற்றிடும் வீரக் கவிதைகள் நெய்தவா
நாடக மொன்றால் சிறப்பான சாகித்யம்
பெற்ற கவிஞரே நீ
சிறிய வயதில் பெரிய பதவி
இனிய புலமை வளர்ந்த புகழால்
அழகாய் படைத்து தமிழை வளர்த்த
கவிஞன் மனதில்வா ழீ
பாரதி போற்றிட முன்னேற்றம் கொண்டாய்
புதுவை பிறப்பே பெருங்குடி வித்தே
அரசியல் கற்றாய் நலம்மிகு செய்தாய்
இதயத்தில் வாழிய நீ
நின்வழி தாய்மொழிக் காகவே வாழுதல்
என்வழிக் கூட தொடர்வதே நின்வழி
புத்தம் புதியதாய் பூமியும் ஆனதும்
உற்சாகம் கொள்வீர்தா னே