நேத்திரம் நிலைப்படி நோக்குதே

நேத்திரம் நிலைப்படி நோக்குதே!
+++++++×+×++++++++++×××××××××××
அத்தான் வருகிறார் என்றே 
முத்தான செய்தி வந்ததே 
ஆடினேன் ஆடினேன் ஆடியே 
ஆடிமுன் அமர்ந்தேன் பாடியே 
பார்த்தேன் அழகு நாடியே 
சேர்த்தேன் வண்ணம் தேடியே! 

மென்பூவில் பனி போல 
மேனி சிலிர்க்கும் நினைவால
மேன்மை உற்ற சிங்காரம் 
மேனி முழுதும் அலங்காரம் 
மோதும் காதல் மின்சாரம் 
மோகம் கூட்டும் சிருங்காரம்! 

முத்தான அத்தான் நேசம் 
முகிழ்ந்த முல்லை வாசம் 
சேர்ந்து எம்மை ஆளும்
சித்தம் பித்தம் பிடிக்கும் .

நிலவும் முகிலும் தவழ 
நினைவும் மனதில் முகிழ 
இதமோடு இதழ் அவிழ 
இன்பமே தந்ததே துன்பமே! 

நெஞ்சிலே மிகும் அன்பு
நெருக்கம் நாடும் உணர்வு
நெருஞ்சி முள்ளாய் ஊறுதே 
நேத்திரம் நிலைப்படி நோக்குதே!

எழுதியவர் : கிருஷ்ண சதானந்த விவேகானந (11-Oct-16, 10:39 pm)
பார்வை : 104

மேலே