தாந்தோணிகள் தான்தோன்றிகள்

ராமு- சோமு உரையாடல்
------------------------------------------

ராமு : டேய் சோமு, இந்த கால பசங்க நாம
எது கேட்டாலும் அலட்சியமா
ஐய! எனக்கெல்லாம் தெரியும்
என்கிறார்களே இதை பத்தி நீ என்ன
நெனைக்கறே ?

சோமு : ராமு அண்ணே, இவங்களை என்ன
சொல்லலாம் ............ ம்ம்ம்ம்ம் . தருதலைகள்
இல்ல முந்திரிக்கொட்டைகள்.... ம்ம்ம்ம்ம்ம்..
இல்ல அண்ணே தாந்தோணிகள் என்பேன்

ராமு : அப்படினா ?

சோமு : இவங்க சுயம்புவாய் தோன்றியவர்கள் போல்
ஒரு கனவுலகத்தில் இருக்கிறார்கள்
கனவு கலையும்..... ஆனால் அப்போது
அவர்கள் குழந்தைகள் இதே பதில் அவர்களுக்கு
கொடுக்க விழித்து கொள்வார்கள்
ராமு : இதுக்கெல்லாம் காரணம் என்னவா இருக்கும் சோமு?

சோமு : அண்ணே, நாம படிக்கச்சே பள்ளியிலே ஆசான்
பய-பக்தி தரும் குரு -நாம் பெரியவர்களை
மதித்தோம்,மதிக்கின்றோம்
இன்று பள்ளிகள் ஒரு வியாபார களம்-
அங்கு நல்ல ஆசான்-குருக்களை யார்
தேடுவது -அதனால் மாணவர்கள்
சிலவற்றை வாத்யாரிடமும்,பலவற்றை
தாங்களே (தாந்தோணி)அறிவதற்கு எண்ணுகிறார்கள்
தவறு செய்கிறார்கள் -பெரியவர்களை
மதிக்க தவறுகிறார்கள் வாழ்க்கையில்
தவறுகள் செய்கிறார்கள்

காலச்சக்கரம் இவர்களை சமன்படுத்தும் அண்ணே !

ராமு ; அப்பாடா ஒரு காலட்சேபம் அல்லவா
நீ சொன்ன கருத்து; அத்தனையும் உண்மை
உன்னில் இத்தனை அறிவா மெச்சுகிறேன்

சோமு ; ஹீ ஹீ................. அண்ணே ஏதோ மனசுல
பட்டதை சொன்னேன் ! அவ்ளோதான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Oct-16, 6:59 am)
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே