நீ வேண்டும்

வற்றாத அன்பொன்று நெஞ்சுக்குள் பொங்குதடி
இவள் கேட்டாலும் தீராதென சலைக்காமல் சொல்லுதடி
தோள் மீது தலைசாய அடி நெஞ்சம் ஏங்குதடி
அவள் வெறுத்தாலும் பிரியாதே என உள் உயிர்தான் வேண்டுதடி
காரணமோ ஒன்றிரண்டு நமை இன்று பிரித்ததடி
காலம் தான் சொல்லுமது நம் நட்பின் பெருமையடி
தீராத ஏக்கங்கள் நம் மனதை இனி,வாட்ட
பகிராத சோகங்கள் கண்களிலே நீரூற்ற
கனவுகளாய் அவள் நினைவு நித்தம் நித்தம் தாலாட்ட
தாளாத சோகமோ மது போதையில் தள்ளாட
கேட்காத வரமொன்று என் கையில் வந்ததடி
ஓயாமல் தேடுகிறேன் மறைந்த என் நிலவையடி
மரு ஜென்மம் என்றொன்று இனி இங்கு,நான் எடுத்தால்
வேறெதுவும் வேண்டாமே
தாயாக உனை தவிர

எழுதியவர் : sanjeev(psycho11) (12-Oct-16, 6:08 pm)
சேர்த்தது : சஞ்சீவ்
Tanglish : nee vENtum
பார்வை : 396

மேலே