பண்டமாற்று
பொறியியல்
படித்தால்,
பொற்காலம்
உண்டென்று;
வாழ்வியல்
கற்றோர்
வாயாரப் புகழுகின்றார்.
மருத்துவம்
படித்தால்,
மகத்துவம்
உண்டென்று;
மக்களை
பெற்றவரோ,
மயங்கித் திரிகின்றார்
.
களைகட்டி
நடக்குதிங்கே
கல்வியெனும்
வியாபாரம்.
தரமான
கல்விக்கோ,
தரவேண்டும் ஏராளம்.
கட்டாயக் கல்வி
என்று
சட்டங்கள் போட்டாலும்,
கட்டணம் ஏதுமின்றி
கிட்டிடுமா
தொழிற்கல்வி ?
லட்சங்கள்
கொடுத்தேனும்
லட்சியத்தை
அடைவோமென்று
நிதி கொட்டி
கொடுத்த கூட்டம்
நீதி கேட்டு
அலைகிறது.
நீதிமன்ற வாசலிலே.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
